ஷானி அபேசேகர குற்றப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (15) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் (NPP) மேடையில் தோன்றிய ஷானியின் நியமனம் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒன்று என SJB முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை அவர் விரைவில் வெளிக்கொணருவார் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் கூறினார்.

0 comments:
Post a Comment