மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.
இந்த விபத்தில் காயமடைந்த 35 பேர் கந்தர தலல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் இரு வாகனங்களினதும் முற்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




0 comments:
Post a Comment