12கிலோ 230 கிராம் கேரளக் கஞ்சாவுடன் கல்முனையைச் சேர்ந்த ஒருவரையும், மருதமுனையைச் சேர்ந்த ஒருவைரையும் கல்முனை - நீலாவணை முகாம் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (04 செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெற்றுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, கல்முனைக்குடி 14 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேக ஒருவரையும், மருதமுனையைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரையும் கேரளக் கஞ்சாவுடன் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு இவர்களிடம் இருந்து ருபா 59 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment