பட்டலந்த விசாரணை அறிக்கையை ஏற்கும் அரசின் முடிவு, மக்கள் விடுதலை முன்னணியின் குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவே அமையும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
படலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அதிகாரத்தில் முழுவதுமாக ஜே.வி.பி. செய்த குற்றங்கள் பற்றிய விவரங்களே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு 1948 விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது எனவும் இவ்வாறான ஆணைக்குழுவிற்கு குற்றவாளி யார், குற்றமற்றவர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
1977 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் ஆணைக் குழுக்களுக்கு மட்டுமே நீதிமன்ற அதிகாரங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment