• Latest News

    December 28, 2025

    ஜனவரி 9ஆம் திகதி வரை டக்ளஸ் தேவானந்தாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

     


    முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை டக்ளஸ் தேவானந்தாவை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவப் பிறப்பித்துள்ளது.

    முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக   அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனவரி 9ஆம் திகதி வரை டக்ளஸ் தேவானந்தாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top