- யூ.கே. காலித்தீன் -
சாய்ந்தமருது
முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
78வது தேசிய சுதந்திரதின நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினதும், பைத்துஸ் ஸக்காத்தினதும் மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் பள்ளிவாசல் முன்றலில் காலை 06.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
சாய்ந்தமருது
முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், ஜம்மிய்யத்தல் உலமா, வர்த்தக சங்கம்
ஆகிய வற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொருப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான
ஏ.ஜே.டி. சில்வா கலந்து சிறப்பித்தார்.
முபாறக் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர், சாய்த்தமருது ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர், சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாலர்கள், ஆகியவர்களுடன் சாய்ந்தமருத வர்த்தக சங்கத்தின் செயலாளர், பொருளாலார் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.




0 comments:
Post a Comment