அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு விதித்த பெரும்பாலான அதிக சுங்க வரிகள் சட்டவிரோதமானவை என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ட்ரம்ப் தனது நிர்வாக அதிகார வரம்பை மீறி செயற்பட்டுள்ளதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
6–3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
1977ஆம் ஆண்டு தேசிய அவசரநிலைகளை சமாளிக்க இயற்றப்பட்ட சர்வதேச அவசர பொருளாதாரச் சட்டத்தின் கீழ் ட்ரம்ப் நிர்வாகத்தினால் இந்த வரிகள் விதிக்கப்பட்டன.
எனினும்இ ட்ரம்ப் நிர்வாகத்தினால் உலக நாடுகளுக்கு விதித்த பெரும்பாலான சுங்க வரிகள் இந்த சட்டத்தின் பிரகாரம் அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புஇ ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பின்னர் முன்வைத்த மிகத் துணிச்சலான நிர்வாக அதிகாரக் கோரிக்கைகளில் ஒன்றிற்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
ட்ரம்ப்இ இந்த சுங்க வரிகள் அமெரிக்க மத்திய அரசுக்கான வருமானத்தை பெருக்கிஇ தொழிற்துறையை உயிர்ப்பித்துஇ உலக பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு 'நியாயமானதாக' மாற்றும் என வாதிட்டிருந்தார்.
ஆனால் பொருளாதார நிபுணர்கள்இ இவ்வரிகள் ஏற்கனவே அதிகரித்த பணவீக்கத்துக்குப் பின்னர் அமெரிக்கர்களுக்கு கூடுதல் விலைச் சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தனர்.
அமெரிக்க அரசியலமைப்பின் படிஇ வரிகளை விதிக்கும் பிரதான அதிகாரம் காங்கிரஸுக்கே உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment