ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தியதாகக் கூறப்படும் “No Quarter” (சரண் அடைந்தாலும் மன்னிப்பு இல்லை) என்ற மிரட்டல், சர்வதேச சட்டங்களை மீறுவதாக சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
“No Quarter” என்பது, எதிரி தரப்பினர் சரணடைய முன்வந்தாலும் அவர்களை கொல்லும் உத்தரவைக் குறிக்கும். இது Hague Convention மற்றும் Geneva Conventions – Additional Protocol I (Article 40) ஆகியவற்றின் படி முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும்.
International Crisis Group அமைப்பின் மூத்த ஆலோசகர் பிரையன் ஃபினுகேன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள், இத்தகைய கொள்கையை ஒரு அரசு அதிகாரி வெளிப்படையாக அறிவிப்பதே சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் போர்க்குற்றமாகக் கருதப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் 1996 War Crimes Act மற்றும் US Department of Defense War Manual ஆகியவையும் இத்தகைய மிரட்டல்களை விடுப்பதையும் அல்லது நடைமுறைப்படுத்துவதையும் தடை செய்கின்றன.
இந்த சர்ச்சை, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மார்ச் 13, 2026 அன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,
“எங்கள் எதிரிகளுக்கு மன்னிப்போ சலுகையோ கிடையாது — No Quarter, No Mercy” என்று கூறியதைத் தொடர்ந்து உருவானது.
இதற்கிடையில், Human Rights Watch உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், இத்தகைய கருத்துக்கள் போர்க்களத்தில் உள்ள வீரர்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளன.
அதேவேளை, சமீபத்தில் ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட சிறுமிகள் உயிரிழந்த சம்பவம், இத்தகைய கடுமையான போர்க்கால அணுகுமுறைகளின் விளைவாக இருக்கலாம் என சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 comments:
Post a Comment