• Latest News

    August 06, 2013

    பசீர் சேகுதாவுத் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா?

    கொழும்பு -
     முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்த்தரும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருமான பசீர் சேகுதாவுத் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.basheer-segu-dawood
    மூன்று மாகாண சபைத் தோ்தலில்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது. ஆனால், அந்த முடிவை தான் விரும்பவில்லை என்றும், ஆனாலும் காங்கரஸ் எடுத்த தீர்மானத்தை பின்னர் தான் ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் பசீ்ர் சேவகுதாவுத் தெரிவித்துள்ளார்.
    தனித்து போட்டியிடுவதனால் அரசாங்கத்துக்கு எதிரகவே தோ்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும். என்றும் அமைச்சர் பதவியை வைத்துக்துக் கொண்டு அவ்வாறு அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை செய்ய முடியாது என்றும் அமைச்சர் பசீர் சேகுதாவுத் கூறியுள்ளார்.
    மனச்சாட்சிப்படி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டுத்தான் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஆகவே, அமைச்சுப் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பசீர் சேகுதாவுத் கூறியுள்ளார்.
    தான் ஏற்கனவே கூறியதன் பிரகாரம் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் எடுத்த தவறான முடிவினால் இந்த நிலை ஏற்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    ஆனால், எப்போது இராஜினாமா செய்வது என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பசீர் சேகுதாவுத் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா? Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top