
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500
ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சின்
தெற்று நோய் ஆய்வுப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்தமைய இந்த ஆண்டின் இது வரையான
காலப்பகுதியில் சுமார் இருபத்து இரண்டாயிரம் பேர் டெங்கு நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும்இதில் சுமார் 47 நோயாளிகள் மேல் மாகாணத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்
கொழும்பு, குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய
மாவட்டங்களிலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதாக சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளதுடன் டெங்கு நுளம்பு பரவும் சூழலை
வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்
குறிப்பிட்டுள்ளது
0 comments:
Post a Comment