• Latest News

    September 29, 2013

    முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணி கூறும் ஜனாதிபதி !(VIDEO)

    இலங்கையில் மத சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது அதை தடுக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அல் ஜஸீரா ஊடகவியலாளர்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  கேள்வி முன்வைத்த போது .
    மஹிந்த ராஜபக்ஷ இப்படி பதில் வழங்கியுள்ளார்:- ,அப்படிஇல்லை..! , .. , சில சம்பவங்கள் , தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றுக்கான பின்னணியை…  ஏன் அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று நீங்கள் கண்டிப்பாக  பார்க்க வேண்டும்.
    சில சம்பவங்கள் , ஆறு , ஏழு  வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்பட்டுள்ளாள். அப்போது இயற்கையாக  அவர்கள் சென்று அவர்களை தாக்குவார்கள் அவர்கள் எந்த சமூகத்தவர்களாக , மதத்தவர்களாக  இருந்தாலும் சரி , மக்கள் இதை கேள்விப் படும்போது குழப்பம் அடைவார்கள் . இதேபோன்ற சம்பவங்கள் சில  இடம்பெற்றிருக்கிறது. எல்லா சம்பவங்களுக்கும் சில பின்னணிகள்     உண்டு.
    நாளை நினைக்கிறேன்   இந்த நாட்டில்தான் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும்  கத்தோலிக்கர்கள் , கிறிஸ்தவர்கள் கூட தமது மதத்தை எந்த பிரச்சினையும் இன்றி அனுஷ்டித்துவருகிறார்கள்
    227 சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளது என்று நவநீதம் பிள்ளை கூறுகிறார் ….  என்று கேள்வி முன்வைக்கப் பட்டபோது.
    இல்லை .இது அனைத்து அர்த்தமற்றவை . அந்த பட்டியலை என்னிடம் தாருங்கள் நான் பார்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    அல்ஜஸீரா ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணி கூறும் ஜனாதிபதி !(VIDEO) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top