அம்பாறை மாவட்டத்தில் பாவனையாளர் சட்டத்தை மீறும் வகையில் வியாபார
நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 26 வர்த்தகர்கள் பாவனையாளர் அலுவலக அதிகார சபை
அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பாவனையாளர் சட்டங்களை மீறும்
வகையில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த தவறியமை, குறித்த விலைக்கு அதிகமான
விலையில் பொருட்கள் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை அகற்றாமல்
வைத்திருந்தமை போன்ற குற்றங்களின் பேரில் இவர்கள் நீதிவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டனர்.
பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொண்ட
தேடுதலின்போது குறித்த வியாபார நியமத்தையும், பாவனையாளர் சட்டத்தையும்
மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட 08 வர்த்தகர்களை பொத்துவில் நீதிவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது தலா 3, 000 ரூபா தண்டப்பணம் விதித்து
நீதிவான் ஜே.என். றிஸ்வான் தீர்ப்பளித்தார்.
இதேவேளை, கல்முனை
பிரதேசத்தில் இனம் காணப்பட்ட 18 வர்த்தகர்களை கல்முனை நீதிவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 20,000 ரூபா தண்டப்பணம் விதித்து
தீர்ப்பளித்தார்.
0 comments:
Post a Comment