அஹமட்,
கல்முனை மாநகர
முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை முதல்வர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான
ஒரு வார கால அவகாசத்தினை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (25.10.2013) ஜூம்ஆ
தொழுகையினை சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் சிராஸ் நிறைவேற்றிவிட்டு வெளியேறும் போது
புடைசூடிய பொதுமக்கள் முதல்வர் பதவியினை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க வேண்டாம்
என சிராஸிடம் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று காலை
கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பதவி விலகக் கூடாதென சாய்தமருது
பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

0 comments:
Post a Comment