• Latest News

    October 25, 2013

    ஐந்திற்கு ஒன்றாக இராணுவம் குறைக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் விக்கேஸ்வரன் வட மாகாண சபையின் முதலாவது அமர்வில் தெரிவிப்பு

    வடக்கு தேர்தலில் மக்கள் வாக்களித்த விகிதத்தின்படி பார்க்கும் பொழுது அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மாகாண சபைத் தேர்தலைக் கருதியுள்ளனர் என்பது வெளிப்படையானது  முதலில் இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும். 5 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் படையினரின் பிரசன்னம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் நாம் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது. படிப்படியான இராணுவ குறைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும்.
    வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று ஆளுனர் சந்திரசிறியின் பிரகடணத்துடன்  ஆரம்பமாகியது. சபைத் தலைவர் பிரதி தலைவர்கள் தெரிவு நிறைவடைந்ததன் பின்னர்  முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
    ஐந்து பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் படையினரின் பிரசன்னம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் நாம் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது. படிப்படியான இராணுவ குறைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கம் இத்தகைய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நடைமுறையில் அவ்வாறு இல்லாத போதும் அந்த அறிவிப்பை வரவேற்கிறோம். அதனை நாம் எதிர்பார்த்திருக்கிறேம். சர்வதேச நியமங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், சரணடைந்த போராளிகளை விடுவித்து அவர்கள் சமூகத்துடன் மீளவும் சுமூகமான வாழ்க்கையில் இணைய அனுமதிக்கப்பட வேண்டும்.
    அதற்கான பொறிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு தற்போதைய ஆளுநர் பொருத்தமற்றவர். அந்த வகையில் பொருத்தமான ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். மக்கள் வீடுகளில் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக அரச ஆதரவு துணைக் குழுக்களின் கலைப்பு முக்கியமானதாகும். அவர்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். இராணுவத்தினரை குடாநாட்டில் நிலை நிறுத்துவதற்காக சில நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். அத்தகைய நாடகங்களை மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இராணுவத்தை நிலைநிறுத்தி வைக்க மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. எதிர்வரும் காலங்களில் இராணுவத்தை நிலைநிறுத்தி வைப்பது சாத்தியமற்றதாகும். என்றார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐந்திற்கு ஒன்றாக இராணுவம் குறைக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் விக்கேஸ்வரன் வட மாகாண சபையின் முதலாவது அமர்வில் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top