எல்.ரி.ரி.ஈ போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் கல்லறைகள் மற்றும்
நினைவுத் தூபிகள்க்கு எந்த ஜனநாயக நாடும் அனுமதிக்காது என்று யாழ்ப்பாண
பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க
நேற்று கூறியுள்ளார். இந்த விடய த்தைப் பொறுத்த மட்டில், தன்னைச் சூழவுள்ள
வர்களைப் பற்றி நன்கு அறிந்தவரான, கற்றவரான முன்னால் உயர் நீதிமன்ற
நீதியரசர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.
விக்கினேஸ்வரனின் நிலைப்பாடானது, த.தே.கூ நிலைப்பாட்டில் இருந்து
முற்றிலும் வேறுபட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.வடக்கின் இன்றைய நிலை பற்றிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில்,
இராணுவம் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விலகுதல் என்ற விடயம் பற்றிக் குறிப்பிட்ட அவர், இராணுவத்திடம் தற்போது 50 வீடுகள் அல்லது 60 புளொக்குகள்தான் இருக்கின்றன. இவை இன்னொரு ஆறு அல்லது ஏழு மாத காலத்தில் விடுவிக்கப்படும். நாங்கள் யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தின் 21,000 அல்லது அதற்கு அதிகமான ஏக்கர் காணியையும் 8,000 க்கு அதிகமான வீடுகளையும் விடுவித்துள்ளோம். தற்போது இராணுவம் எந்த பொது நிலத்தையும் உடைமை கொண்டிருக்கவில்லை. அரசாங்க நிலத்தை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்றும் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment