• Latest News

    October 24, 2013

    தனது பாட்டி மற்றும் தந்தை போன்று தானும் கொல்லப்படலாம்!

    நான் இந்திராவின் இரத்தத்தையும் பார்த்தேன், அவர்களை கொன்றவர்களின் இரத்தத்தையும் பார்த்தேன், அதே போல ராஜீவ் இரத்தத்தையும் பார்த்தேன். நெருங்கியவர்களின் இழப்பு ஆழமான மன வருத்ததை தரும் ஆனால் அந்த கோபத்தின் வெளிப்பாடு ஒன்றும் அரியா சாமானியர்களை கொன்றுவிடும். அது போல தான் பாஜக மக்களின் கோபத்தை உபயோகித்துகொள்கிறது.இதுவே பா.ஜ.க மீது தனக்கு இருக்கும் வெறுப்பிற்கு காரணமாகும் என்று ராகுல் ராஜஸ்தான் பிரச்சாரத்தில் உருக்கமாக பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநில தேர்தலுக்காக சிருவில் பிரச்சாரம்
    மேற்கொண்ட ராகுல் பேசுகையில், தனது பாட்டி மற்றும் தந்தை போன்று தானும் கொல்லப்படலாம் என்றும், ஆனால் அதுகுறித்து தான் கவலைப்படவில்லை என்றும் கூறிய ராகுல் காந்தி, பா.ஜ.க. வகுப்புவாத கலவரத்தை தூண்டி விட்டால் அக்கட்சியை தொடர்ந்து விமர்சிப்பேன் என்றார்.

    வகுப்புவாத பிரிவினைக்கு என்றைக்குமே நான் துணை போக மாட்டேன். பா.ஜ.க. வகுப்புவாத கலவரத்தை தூண்டி விட்டால் அக்கட்சியை தொடர்ந்து விமர்சிப்பேன் இதை நான் வாக்கு வங்கிக்காக இங்கு பேசவில்லை, மக்கள் நலனுக்காகவே பேசி வருகிறேன் என்றார்.

    தொடர்ந்து தனது பாட்டி இந்திரா காந்தியுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்ட ராகுல், 'பெரும் வெறுப்பு எனது பாட்டியையும் (இந்திரா காந்தி), தந்தையையும் ( ராகுல் காந்தி) கொன்றது. நானும் கொல்லப்படலாம். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

    சிறுவயதில் எனது பாதுகாவலர் என்னிடம், எனது பாட்டி சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் எனக் கூறியபோது, எனது தொடைகள் நடுங்கின. பிரியங்காவும், நானும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அப்பொழுது சாலையெங்கும் எனது பாட்டியின் ரத்தம் சிந்தி இருந்தது. ஒரு அறையில் எனது நண்பர்களின் இரத்தம் சிதறிக்கிடந்தது. ஆம் எங்களிடம் வேலைப்பார்த்தவர் தான் கொன்றவர், அந்த பியாந்த் சிங் மற்றும் சத்வாந்த் சிங் இருவரிடமும் நன்பனை போலவே பழகி விளையாடி இருக்கிறேன் என்று உருக்கமுடன் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனது பாட்டி மற்றும் தந்தை போன்று தானும் கொல்லப்படலாம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top