கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களை உடனடியாக கொழும்புக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை தற்போதைய மேயர் சிராஸ் மீராசாஹிபு இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று ரவூப் ஹக்கிம் கேட்டுக் கொண்ட போதிலும், சிராஸ் மீராசாஹிபு தான் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமா என்பதனை வாக்களித்த மக்களே தீர்மானிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
இதனால், கல்முனை மாநகர மேயர் பதவி விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியுள்ளதனை அடுத்தே, கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை தற்போதைய மேயர் சிராஸ் மீராசாஹிபு இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று ரவூப் ஹக்கிம் கேட்டுக் கொண்ட போதிலும், சிராஸ் மீராசாஹிபு தான் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமா என்பதனை வாக்களித்த மக்களே தீர்மானிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
மேயர் மற்றும் பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் ஆகியோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை நிஸாம் காரியப்பருக்கு வழங்குவது பற்றி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஆராயப்பட இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை பி.ப 01 மணிக்கு இக்கலந்துரையாடல் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதே வேளை, இக்கலந்துரையாடலில் மேயர் சிராஸ் மீராசாஹிபு கலந்து கொள்ள மாட்டரென்றும் தெரிவிக்கப்படுகின்றன.

0 comments:
Post a Comment