வடமாகாண சபையின் முதாலவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை
(அக்டோபர் 25, 2013) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம்
கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின்
தளப்பகுதியில் துவங்கியது.
முன்னதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவரும் இணைந்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து சபையின் முதல் அமர்வு துவங்கியபோது,
யாழ் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம் அவைத் தலைவராகத்
தெரிவு செய்யப்பட்டு, அவருக்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு அவைத்தலைவர்
இருக்கைக்கு முறையாக அழைத்துச் செல்லப்பட்டார்.
450 மில்லியன் ரூபா செலவில் புதிதாக கட்டப்பட்டு
வரும் கட்டிடத்திலேயே வடமாகாண சபை அமர்வுகள் இடம்பெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மாடிப்பகுதியில் தொடர்ந்தும் கட்டுமானப்பணிகள்
நடந்துவருகின்றன.


0 comments:
Post a Comment