• Latest News

    October 25, 2013

    அப்பிள் தயாரிப்பை முந்தும் ( SAMSUNG) செம்சுங்!

    அப்பிள் நிறுவனம் அண்மையில் விரல் ரேகையை வைத்து போனிற்குள் நுழையக்கூடிய பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரை வைத்து ஐபோன் 5S ஐ அறிமுகப்படுத்தியிருந்ததுடன் இது போனுக்கு சிறப்பான பாதுகாப்பை அளிப்பதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

    இதேபோல் எச்.டி.சி. நிறுவனமும் தனது வன் மெக்ஸ் ஸ்மார்ட் போனில் பிங்கர்பிரிண்ட் வசதியை வைத்துள்ளது அப்பிளை விட சற்று மேம்பட்ட சிந்தனையும், புத்துருவாக்க சிந்தனையும் கொண்டுள்ள செம்சுங் ஒரு படி மேலே சென்று கண்களை ஸ்கேன் செய்து அதன் அடிப்படையில் போனிற்குள் நுழையக் கூடிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களின் அடுத்த வெளியீடான கெலக்ஸி எஸ்5 வில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும் இத்தகவலை செம்சுங் உறுதிப்படுத்தவில்லை.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அப்பிள் தயாரிப்பை முந்தும் ( SAMSUNG) செம்சுங்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top