• Latest News

    October 27, 2013

    பொதுநலவாய மாநாட்டில் மலேசியா கலந்து கொள்ளக் கூடாது: ; எதிர்க் கட்சி தெரிவிப்பு

    இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் மலேசியா கலந்து கொள்ளக் கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு மலேசிய அரசாங்கம் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க் கட்சியான மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி இந்த கோரிக்கையை விடுத்தள்ளது.

    இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

    உரிய விசாரணை நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மலேசியா அரசாங்கம் அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுநலவாய மாநாட்டில் மலேசியா கலந்து கொள்ளக் கூடாது: ; எதிர்க் கட்சி தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top