மலேரியாவிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படும் இலங்கையில் மீண்டும் அந்நோய் தலையெடுக்கக் கூடிய சாத்தியக்
கூறுகள் இருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விடயத்தில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தொடர்ச்சியாக உள்நாட்டில் 3வருடங்கள்
மலேரியா காய்ச்சல் நோயாளிகள அடையாளம் காணப்படாத நிலையில் கடந்த 2012ம்
ஆண்டு மலேரியாவிலிலிருந்து விடுவிக்கப்பட்ட நாடாக இலங்கை தன்னை அறிவித்து
கொண்டது.
ஆனால் களனி பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வொன்றில், கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர பிரதேசங்களில் காணப்படும்
நீர்நிலைகளில் மலேரியா நோய்க் காவியான அனோபிலஸ் நுளம்பு காணப்படுவது
கண்டறியப்பட்டுள்ளதால், இது தொடர்பாக மீண்டும் ஆய்வுகளை செய்ய வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
களனி பல்கலைக்கழகத்தினால் மட்டக்களப்பு வாவியை
அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, அனோப்பிலஸ் நுளம்பு
உவர் நீரில் காணப்பட்டுள்ளது.
அனோப்பிலஸ் நுளம்பு உவர் நீரில் காணப்படுவது
வழமைக்கு மாறானது என்று மட்டக்களப்பு பிராந்திய மலேரியா தடுப்பு
நடவடிக்கைக்கான வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம். பரீத் அஹமட்
கூறுகின்றார்.
2012 ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையைச் சேர்ந்த
மலேரியா நோயாளிகள் என எவரும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால், ஓரிருவர்
நோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டாலும், அவர்கள் தென் ஆபிரிக்கா, இந்தியா
மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிலிருந்து வந்தவர்கள் என
கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவை அதிகாரிகள் குறிப்பிடுகின்றார்கள்.
BBC-

0 comments:
Post a Comment