மருத்துவக் கல்விக்கு இடங்கள் ஒதுக்குவதில் நடந்த
முறைகேட்டில் குற்றவாளி என்று சி பி ஐ நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு 4
ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ஆளும் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை
உறுப்பினரான ரஷீத் மசூத், எம்.பி. பதவி வகிப்பதில் இருந்து தகுதி நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.
இன்று ராஜ்ய சபாவின் பொது செயலாளர் ஷும்ஷேர் கே.
ஷேரிபின் அறிவிப்பில், ரஷித் மசூத்தின் பதவி நீக்கத்தை தொடர்ந்து ஒரு
காலியிடம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . இந்த அறிவிப்பை அவர்
தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.
1990அம் ஆண்டு சுகாதார துறை அமைச்சராக ரஷீத்
மசூத் பதவி வகித்த காலத்தில் எம்.பி.பி.எஸ் அகில இந்திய ஒதுக்கீட்டில்
முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.
அதன் தொடர்பாக சி பி ஐ அவர் மீது வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி , அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை
என்று கண்டபிறகு, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது. கடந்த மாதம் 19–ந் தேதி சி.பி.ஐ. சிறப்புக் நீதிமன்றம்,
ரஷீத் மசூதை குற்றவாளி என்று அறிவித்தது.
அக்டோபர் ஒன்றாம் தேதி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அறிவித்திருந்தது சி பி ஐ நீதி மன்றம்.
மேலும் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தற்போது
தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. லாலு பிரசாத் யாதவும் , எம்.பி. ஜகதீஷ்
ஷர்மாவும் விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment