• Latest News

    October 27, 2013

    விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அவரை இனப் பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு!

    இப்னு செய்யத் -
    வேளாண்மைச் செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற வயற் காணிகளில் பாசிப் பயறு பயிர்ச் செய்கையை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதனை நோக்கக் கொண்டு நிந்தவூரில் பாசிப் பயறு பயிர்ச் செய்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இதன், அறுவடை 29.10.2013 செவ்வாய் கிழமை நிந்தவூர் மாட்டுப்பளை கண்டத்தில் நடைபெற இருக்கின்றது.

    வேளாண்மைச் செய்கையில் நாடு தன்னிறைவு அமைந்திருப்பதனாலும், வேளாண்மைச் செய்கை மூலமாக விவசாயிகள் எதிர் பார்த்த இலாபங்களை அடைந்து கொள்ள முடியாதிருப்பதன் காரணமாகவும் அரசாங்கம் பயறுச் செய்கையை ஊக்குவித்து வருகின்றது.

    இத்திட்டத்தின் பிரகாரமே நிந்தவூரில் பாசிப்பயறு செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக ஆலோசனைகளை நிந்தவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியர் எஸ்.எச்.ஏ.நிஹார் வழங்கி வருகின்றார்.

    29.10.2013 அன்று நடைபெறவுள்ள மேற்படி அறுவடை வைபவம் நிந்தவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியர் எஸ்.எச்.ஏ.நிஹார் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், அம்பாரை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், நிந்தவூர் பிரதேச செயலாளர் றிபாஉம்மா அப்துல் ஜலீல், அட்டாளைச்சேனை உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் விவசாயிகள் ஆகியோர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அவரை இனப் பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top