• Latest News

    November 02, 2013

    பலாத்காரம் செய்து உயிருடன் புதைக்கப்பட்டதன் பின் மீண்டு வந்த சிறுமி !

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தோபா தேக் சிங் என்ற இடத்தில் கடந்த வாரம் தனியாக சென்ற 13 வயது சிறுமியை வழிமறித்த இருவர் அவளை கதறக் கதற பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர்.

    அந்த சிறுமியை உயிருடன் விட்டால் விஷயம் வெளியே தெரிந்து ஆபத்தாகி விடும் என நினைத்து இருவரும் சேர்ந்து ஒரு குழியை தோண்டி மயங்கிய நிலையில் இருந்த அவளை உயிருடன் புதைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

    மயக்கம் தெளிந்த சிறுமி, தான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை அறிந்து, முட்டி மோதி மண்ணை தள்ளி புதைகுழியில் இருந்து மீண்டு வந்தாள்.

    அவ்வழியாக வந்த சிலர் அவளது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.

    இந்த கொடிய சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரை ஏற்றுக் கொள்ள பொலிசார் மறுத்து விட்டனர்.

    இதனையடுத்து, லாகூர் ஐகோர்ட் உயர் நீதிபதியின் தனிப்பிரிவில் அவர் புகார் அளித்தார். அதன் பின்னர், நீதிபதியின் உத்தரவையடுத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்து உயிருடன் புதைத்த 2 குற்றவாளிகளையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பலாத்காரம் செய்து உயிருடன் புதைக்கப்பட்டதன் பின் மீண்டு வந்த சிறுமி ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top