சிங்களப் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்பால் இந்த நாட்டில் ஒரு
காலத்தில் சிங்கள இனம் இல்லாமல் போகும் நேரத்தில் போகும் நேரத்தில் பௌத்த
மதம் முற்றாக இல்லாதொழிந்து போகும்.இவ்வாறு ஆரூடம் கூறியுள்ளார் பொதுபலசேனா
அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.
பொதுபலசேனா அமைப்புக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறி
சேனாவுககும் இடையில்கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே
தேரர் இவவாறானதோர் கவலையை வெளியிட்டுள்ளார்.
சில கிராமங்களில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள்
அச்சுறுத்தப்பட்டுக் கருக்கலைப்புக்கு இணங்க வைக்கப்படுகின்றனர். புள்ளி
விபரங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
எனவே, சுகாதார அமைச்சர் இது சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தி சட்ட
விரோதக் கருக்கலைப்பு மையங்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றார்.

0 comments:
Post a Comment