பொத்துவில்;
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித்தினால் முன் வைக்கப்பட்ட 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் ஆளும் மு.காவின் உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 18.11.2013இல் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ்வமர்வில் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வேளையில் வரவு-செலவு திட்டம் பற்றி உறுப்பினர்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் உரையாற்றுகையில், வரவு-செலவுத் திட்டத்தில் பொதுத் தேவைகளுக்கும், பொது மக்களுக்குமான ஒதுக்கீடுகள் குறைவாகவே இருக்கின்றன. அதே வேளை, தனி நபர் வாழ்க்கை வசதிகளுக்கு கூடுதலான அக்கரை காட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.பொத்துவில் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 18.11.2013இல் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ்வமர்வில் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வேளையில் வரவு-செலவு திட்டம் பற்றி உறுப்பினர்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
உறுப்பினர்களின் கருத்துக்களை அடுத்து, வரவு-செலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வரவு-செலவு திட்டத்தை எதிர்த்து மு.காவின் உறுப்பினர்களான ஏ.எம்.எம்.தாஜுதீன், எம்.எஸ்.எம்.மர்சூக், எம்.எச்.ஏ.றஹீம், எம்.எஸ்.முபாரக் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் துரைரெட்ணம் ஆகியோர்கள் வாக்களித்தார்கள்.
தவிசாளரைத் தவிர்த்து வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக மூன்று வாக்குகள் அளிக்ககப்பட்டன. மு.காவின் ஒரு உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
0 comments:
Post a Comment