கல்முனை;
கல்முனை மாநகர முதல்வர் விடயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் எடுத்திருக்கின்ற முடிவு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையினர் ரவூப் ஹக்கீமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
சாய்ந்தமருதில் நடைபெற்ற முதல்வர் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிரகடன அறிக்கை மற்றும் அங்கு தெரிவிக்கப் பட்ட கருத்துக்கள் என்பன நம்பிக்கையாளர் சபையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருதில் நடைபெற்ற முதல்வர் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிரகடன அறிக்கை மற்றும் அங்கு தெரிவிக்கப் பட்ட கருத்துக்கள் என்பன நம்பிக்கையாளர் சபையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை ஞாயற்றுக் கிழமை நடைபெறவிருக்கின்ற இச்சந்திப்பின் போது. மேயர் பதவியை மேலும், இரண்டு வருடங்களுக்கு சிராஸ் மீராசாஹிவுக்கு வழங்குமாறு ரவூப் ஹக்கிமிடம் வலியுறுத்த இருப்பதாக சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் தெரிவித்தனர்.
இதே வேளை, சிராஸ் மீராசாஹிவு தொடர்பில் கட்சி எடுத்துள்ள முடிவில் எந்த நெகிழ்வுத் தன்மையும் கிடையாது என்று ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.
இனிமேல் எவரும் கட்சிக்கும், தலைமைக்கும் அளிக்கும் உறுதி மொழிகளை நிறைவேற்றாது இருக்க முடியாது. அவ்வாறு செயற்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
கட்சியின் கட்டுக் கோப்பை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கும், கட்சியை அடமானம் வைத்துப் பிழைப்பு நடத்தவும், பதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் முயற்சிகளை எடுக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று கட்சியின் ஆதரவாளர்கள் விரும்புகின்றார்கள். சிராஸ் மீராசாஹிவு விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவனை நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கட்சியின் போராளிகளும், ஆதரவாளர்களும் சரி என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகளின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளதென்றும் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment