நிந்தவூரில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களில் பிணையில் விடுதலை செய்யப்படாமல் இருந்த 14 பேரும் இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ரீ.கருணாகரனினால் விடுவிக்கப்பட்டார்கள்.
கடந்த 17ஆம் திகதி இரவு முதல் நிந்தவூரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் நிந்தவூர் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 19.11.2013 அன்று பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்களை சம்மாந்துறைப் பொலிஸார் 20.11.2013 அன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 18வயதிற்கு குறைந்த 06பேரையும், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரையும் நீதிபதி தலா 50ஆயிரம் சரிரப் பிணையில் விடுவித்தார்.கடந்த 17ஆம் திகதி இரவு முதல் நிந்தவூரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் நிந்தவூர் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 19.11.2013 அன்று பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
ஏனைய 14 பேரையும் 22.11.2013 (இன்று வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி ரீ.கருணாகரன் உத்தரவிட்டார்.
இன்று கோர்ட்டில் பொலிஸாரினால் ஆஜர்படுத்திய 14 பேரையும், தலா ரூபா 50ஆயிரம் சரீரப் பிணையில் செல்லுவதற்கு நீதிபதி ரீ.கருணாகரன் உத்தரவிட்டார்.
மேற்படி 14 பேரும், இனிமேல் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றும், அவ்வாறு, ஈடுபடும் பட்சத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிiணைகள் இரத்துச் செய்யப்படுமென்றும் எச்சரிக்கை செய்தார்
0 comments:
Post a Comment