நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற திருட்டு, பொது மக்களுக்கு அச்சுறுத்தல், போன்றவைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரை பொது மக்கள் மடக்கிப் பிடிக்க முற்பட்ட வேளையில், ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தொடர்ந்து நிந்தவூர் பிரதேசத்தில் இன்று அதிகாலை 01 மணி முதல் இன்று மாலை 06 மணி வரை பூரண ஹர்த்தால் மேற் கொள்ளப்பட்டது.
இந்த ஹர்த்தாலை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இன்று மாலை 04 மணியவில் சம்மாந்துறை பொலிஸ்பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் நிந்தவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஹர்த்தாலை இன்று மாலை 06மணியுடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இப்பேச்சுவார்த்தையில் சிரேஸ்ட பொலிஸ்மாஅதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் நடைபெற்றது. இதில் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட டிஐஜி இந்திரன், அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹாஹெதர, விசேட அதிரடிப் படையில் பொறுப்பதிகாரி, இராணுவத்தின் பிராந்திய கமாண்டர், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பைசால் காசிம் எம்.பி, நிந்தவூர் ஜூம்ஆப்பள்ளி நம்பிக்கையாளர் சபையினர் ஆகியோர்கள் பங்குபற்றினர்.இந்த ஹர்த்தாலை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இன்று மாலை 04 மணியவில் சம்மாந்துறை பொலிஸ்பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் நிந்தவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஹர்த்தாலை இன்று மாலை 06மணியுடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று பொலிஸ் தரப்பினரினால் இக்கலந்துரையாடலில் உறுதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment