முஹம்மட் றிபாய் ;
நிந்தவூர்
Best of Young அமைப்பினரின் ஏற்பாட்டில் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின்
அனுசரணையுடன் இம்முறை க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவ
மாணவிகளுக்கான இலவசக் கல்விக்கருத்தரங்கு நேற்று (16.11.2013) நிந்தவூர்
நெனசல அறிவகத்தில் இடம்பெற்றது. இதில் ஆரம்ப நிகல்விற்கு அதிதிகளாக
நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி SLM சலீம், நிந்தவூர் பிரதேச செயலக
உத்தியோகத்தர் AH ஜாபிர், மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இணைப்பாளர் AL
றியால், கிராம சேவை உத்தியோகத்தர் AM வசீம், விரிவுரையாளர் ஜெஸ்மி எம்
மூசா, இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் சுலைமான் ஷாபி மற்றும் Best of Young
அமைப்பின் தலைவர் IM நிஸ்மி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த
இலவசக் கல்விக்கருத்தரங்கில் நெனசல அறிவகத்தின் விஷேட கையேடுகளும்
மாணவர்களுக்கு அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment