• Latest News

    November 03, 2013

    கல்முனை மேயர் முடிவில் மாற்றமில்லை: சந்தித்த குழுவினரிடம் ஹக்கிம் தெரிவிப்பு

    இப்னு செய்யத் -
    கல்முனை மாநகர சபையின் மேயர் சிராஸ் மீராசாஹிப்பின் மேயர் பதவியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் எடுத்துள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டி சாய்ந்தமருது ஜூஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையிலான குழுவினர் இன்று முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பில் ரவூப் ஹக்கிமின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது கேட்டுக் கொண்டனர்.
    சிராஸ் மீராசாஹிப்பின் விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடைதென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
    சிராஸ் மீராசாஹிவு 06 மாத காலங்களாவது நீடித்துத் தாருங்கள் என்று சாய்ந்தமருது ஜூஅ;ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையிலான குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு, சிராஸ் மீராசாஹிப் கட்சியையும், தலைமையையும் மலினப்படுத்தும் வேலைகளையும், பிரதேசவாதத்தையும் தூண்டும் வகையில் மேற் கொண்ட நடவடிக்கைகள் பாரதூரமானதாகும். ஆதலால், அவரது விடயத்தில்; கட்சியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
    இச்சந்திப்பின் போது கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஐ.எம்.பிர்தௌஸூம் மு.காவின் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிமை சந்தித்து கல்முனை மேயர் விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
    இதே வேளை, தற்போது சாய்ந்தமருது ஜூஅ;ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையிலான குழுவினர் மற்றும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோர்கள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸின் இல்லத்தில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. சிராஸ் மீராசாஹிப்தான் வருகின்ற இரண்டு வருடங்களுக்கும் மேயராக இருக்க வேண்டுமென்ற அபிப்ராயத்தில் ஹரீஸ் இருந்து கொண்டிருப்பதாக அவரைச் சந்தித்த குழுவினரில் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
    இதே வேளை, இக்குழுவினர். மு.காவின் செயலாளர் எம.ரி.ஹஸன்அலி, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.எம்.ஜெமீல் ஆகியோர்களை சந்திப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கொழும்புக்கு வெளியே களுத்துறையில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார். இதனால், இன்று அவர் கொழும்பு திரும்புவார் என்று எதிர் பார்க்க முடியாதுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மேயர் முடிவில் மாற்றமில்லை: சந்தித்த குழுவினரிடம் ஹக்கிம் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top