அமெரிக்காவை தவிர்த்து இஸ்ரேல் புதிய நட்பு
நாட்டை தேடிவருவதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லிபர்மன்
தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரானுடன் அணுவிவாகரம் தொடர்பில்
பேச்சுவார்த்தை நடத்தும் சூழலிலேயே
இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
“இஸ்ரேலுக்கும் அதன் நெருங்கிய நட்பு நாடான
அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பலவீனமடைந்திருக் கிறது”
என்று தீவிரவாதியான லிபர்மன் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு
தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் கடும் போக்கு அரசியல்வாதியாக
கருதப்படும் லிபர்மன் ஊழல் சர்ச்சையில் இருந்து இம்மாத ஆரம்பத்தில்
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட் டதைத் தொடர்ந்தே மீண்டும் அந்நாட்டு
வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றார்.
“அரபு அல்லது இஸ்லாமிய உலகின் பணத்தில்
தங்கியிருக்காத, குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள், கவலைகளை தவிர்த்து
களத்தில் வழக்கத்தை மீறி எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படும் நாட்டை
தேடுகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment