• Latest News

    November 23, 2013

    மட்டு நகரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை

    நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் தாண்டவன்வெளி பகுதியில் மூன்று கடைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு கடைகளில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
     'சஜான் எலக்ற்றோணிக்' கடையிலும்,'ஜெ எலிஸபத்' புடவை கடையிலும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இnது வேளை,  'ஆதித்யா'  டிஜிடல் அச்சகமும் கடை உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி
     மட்டக்களப்பு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
     
    மூன்று கடைகளின் கூரைக்கு மேல் ஏறி ஓடுகளை கழட்டி கடைகளுக்குள் திருடர்கள் நுழைந்Nது கொள்ளையிட்டுள்ளனர்.
    இக் கொள்ளை தொர்பில் மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டு நகரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top