மருதமுனை யூ.ஜே.நஸாரின் இசையமைப்பில் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை மொட்டுக்கள்' புதிய இஸ்லாமியப் பாடல்களின் இறுவட்டு வெளியீட்டும்,மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு விழாவும் நேற்று (01-11-2013) மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில்; கவிஞர் அறநிலா தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியும், சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீல் கலந்து கொண்டாh.; அதிதிகளாக எழுத்தாளர் உமாவரதராஜன், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்,
உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் தலைவரும,; பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஐ.ஏ.ஹமீட், சட்டத்தரணி ஏ.எம.;றக்கீப், பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம் ஆகியோருடன் எழுத்தாளர்கள,; கவிஞர்கள்,உள்ளீட்ட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
முதற்;பிரதியை வர்த்தகர் எம்.ஐ.ஏ.பரிட் பிரதம அதிதி முன்னாள் கிழக்குமாகாண மேல்நீதிமன்ற நிதிபதியும் சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீலிடமிருந்து பெற்றுக்கொண்டாh.;
மறைந்த வி.எம்.இஸமாயில்(மருதுர்கொத்தன்), சக்காப்செட்மௌலானா, ஐ.எல்.அபுல்ஹஸன்,வை.எல்.ஏவாஹிட்,யு.எம். சம்சுதீன், ஆகியோருடன் வாழ்ந்;து கொண்டடிருக்கும் எம்.வை.எம் மனாப், முபாறக்(மருதவாசி)வை.எல்.எம் இஸ்மாயில்,எஸ்.சகாப்தீன், ஐ.பீர்முகம்மட் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர் இவர்களுக்கான விருதுகளை இவர்களின் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
;மேலும் இறுவட்டில் பாடிய பாடகர்களுக்கும் பாடல் இயற்றியவர்களுக்கும் அதிதிகளால் விருதுகள் வழங்கப்பட்டன கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சுத்தார் எம். பிர்தௌஸ்,எ.எல்.எம்,எம்.ஏ.ஜாபிர் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள். எம்.எம். சபூர்கான் அசிரியர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
0 comments:
Post a Comment