• Latest News

    November 29, 2013

    அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது?

    அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும் எண்ணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல்களை நடத்திய வருவதாக தெரியவருகிறது.
    அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ள ஜனாதிபதி முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஆலோசித்து வருகிறார்.
    வரவு செலவுத் திட்டம் நிறைவடைந்த பின்னர் அடுத்த வருட ஆரம்பத்தில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி முன்னர் தீர்மானித்திருந்தார்.

    ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வரை பிரதமர் பதவியை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு வழங்க ஜனாதிபதி தீரமானித்துள்ளார்.
    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டு வரும் எதிர்ப்பலையை ஓரளவுக்கேனும் சமாளிக்கும் எதிர்பார்ப்பில் ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
    பிரதமர் பதவியில் இருந்து டி.எம். ஜயரத்ன நீக்கப்பட உள்ளதாக மலையக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியை சரிகட்டுவதற்காக மலையகத்தை சேர்ந்த ஒருவரான நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top