• Latest News

    November 27, 2013

    கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம்

    இன்­றைய நவீன உலகில் போதிய மருத்­துவ வச­தி­க­ளுக்கு மத்­தி­யிலும் அதிகம் மர­ணத்தை ஏற்­ப­டுத்தும் பரவா நோய்­க­ளாக மார­டைப்பும்  Myoiardial Infarction/மூளை­ய­டைப்பும் Stroke/CVA முன்­னிலை வகிக்­கின்­றன. இந்த நோய்களை  ஏற்­ப­டுத்தும்  முக்­கிய கார­ணங்­க­ளாக அதி­க­ரித்த கொலஸ்டோல், உயர்குருதி  அழுத்தம், நீரி­ழிவு  என்­பன இருப்­பதை அறி­வீர்கள்.

    எமது கொழுப்பு உணவின் ஓர் அங்­கமே கொலஸ்ட்ரோல் ஆகும். இவை ஒரு குறிப்­பிட்ட அளவில் இருப்­பது எமது உட­லுக்கு அவ­சியம். கொலஸ்ட்ரோலில் பல கூறுகள் உண்டு. HDl, LDL, TRIGLYCE RIDES என்­பன முக்­கிய கூறு­க­ளாகும். இதில் HDL  கொலஸ்ரோல்  ஆபத்­தற்­றது. அதி­க­மாக  இருப்­பினும்  பாதிப்­பில்லை. நன்­மைதான்.


    ஆனால் LDL, TRIGLYCE RIDES  என்­பன குறிப்­பிட்ட அள­வுக்கு  மேலாக  இருப்­பது  தீங்­கு­களை  விளை­விக்கும். மொத்த கொலஸ்ட்ரோல் குரு­தியில் 200mg இற்கு அதி­க­மாக இருப்பின் நாம் உஷா­ர­டைய வேண்டும். இதுவே 240 mg DL இற்கு அதி­க­மானால் கொலஸ்ட்ரோல் படிவு குருதிக் குழாய்­களின் உட் சுவரில் படிந்து குருதி சீராகப் பய­ணிப்­பதைத் தடுப்­ப­துடன் இரத்தச் சுற்­றினில் குருதி உறைந்து CLOTS உரு­வாக வழி­வ­குக்கும். இந்­நிலை மிகவும் ஆபத்­தா­னது.

    இக்­கு­ருதிக் கட்­டிகள் இதய நாடி­க­ளையோ மூளைக்குச் செல்லும் நாடி­க­ளையோ அடைக்கும் போது மார­டைப்பு மூளை­ய­டைப்பு என்­பன ஏற்­ப­டலாம். கொலஸ்ட்ரோல் படி­வுகள் குருதிக் குழாய்­களில் அதி­க­மாக படிவதால் குருதி பாயும் சிறு குழாய்­களுள் அடைப்பை ஏற்­ப­டுத்தும் அபா­யமும் உண்டு.

    இவ் அடைப்­புக்கள் சிறி­ய­ளவில் இருக்கும் போது களைப்பு, மார்பு வலி, தலை­வலி முத­லான சில அறி­கு­றிகள் அடிக்­கடி தோன்றும். ஆனால் அடைப்பு பெரி­தாகி குருதி வழங்கல் பாதிப்­புறும் போது தீவிர நோய் நிலை ஏற்­படும். மூளை அடைப்­பினால் பக்­க­வா­தமும் ஏற்­ப­டலாம்.

    கொலஸ்ட்ரோல் படிவு அதிக கொழுப்பு உணவு வகை­களை உண்­ப­வர்­க­ளிலும், எடை அதி­க­மாக உள்­ள­வர்களிலும் சிறுவயதிலிருந்தே சிறிது சிறிதாக மெதுவாக படிய ஆரம்பிக்கும். ஆண்­களில் 25 வய­துக்குப் பின்­னரும் பெண்களில் மாத விலக்கு நின்ற பின்­னரும் கொலஸ்ட்ரோல் வேக­மாக அதி­க­ரிக்கும். பெண்­களில் மாத­வி­லக்கு தொடரும் காலங்­களில் பால் ஓமோன்கள் கொலஸ்ட்ரோலின் அளவைக் கட்­டுப்­ப­டுத்த உத­வு­கின்­றன. ஈஸ்­ரஜன் குறையும் போது கொலஸ்ரோல் அதி­க­ரிக்கும்.

    ஒரு­வரில் கொலஸ்ட்ரோல் தேவை­யான அளவை விட அதி­க­ரித்­தாலும் வெளியே எது­வித அறி­கு­றி­களை உடனும் தோற்­று­விப்­ப­தில்லை. நடுத்­தர வயதை அண்­மிக்கும் போது இதன் படிவு குருதிக் குழாய்­களில் அதி­க­ரிக்கும் போதே அறி­கு­றிகள் வெளித்­தெ­ரிய ஆரம்­பிக்கும்.

    எதுவும் இது ஏற்­ப­டுத்தும் இதர நோய் நிலை­களைப் பொறுத்தே இருக்கும். சற்று காலம் செல்ல இப்­ப­டி­வுகள் நாடி­களில் அதி­க­ரிக்கும் போது மார­டைப்பு, மூளை­ய­டைப்பு அல்­லது பக்­க­வாதம், சிறு­நீ­ரக நோய்கள், ஈரல் நோய்கள், கண் பார்­வையில் பாதிப்பு உட்­பட பல பாதிப்­புக்கள் ஏற்­படும்.
    கொலஸ்ரோல் அதி­க­ரித்­துள்­ளதை  LIPID PROFIFE  என்ற குருதிப் பரி­சோ­தனை மூலமே கண்­ட­றிய முடியும். இரவு சாப்­பிட்ட பின்னர் 12 மணித்­தி­யா­லங்கள் எதுவும் உண்­ணாமல் இருந்து காலையில் இரத்­தத்தை பரி­சோ­திக்க வேண்டும். இடையில் வெறும் தண்­ணீரைத் தவிர வேறு நீரா­கா­ரங்­களும் அருந்தக் கூடாது.

    நீரி­ழிவு, உயர்குருதி அழுத்தம் முத­லான நோயுள்­ள­வர்­களும் உடற் பருமன் உள்­ள­வர்­களும் கட்­டா­ய­மாக இப் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வேண்டும். பரம்­ப­ரையில் கொலஸ்ட்ரோல் உள்­ள­வர்­களும் கட்­டா­ய­மாக பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வேண்டும். 30 வய­துக்கு மேற்­பட்ட ஆண்­களும் மாத­விடாய் நின்று போன பெண்­களும் இப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­வது நல்­லது. உடலு­ழைப்பு குறைந்­த­வர்­களும் பரி­சோ­தித்தல் வேண்டும்.

    கொலஸ்ட்ரோல் அதி­க­ரிப்­புக்கு அதிக கொழுப்­பான உண­வு­களை உட்­கொள்­வதும் பரம்­பரை அலகும் முக்­கிய கார­ணங்­க­ளாகும். இது தவிர முன் குறிப்­பிட்­டது போல உயர் குருதி அழுத்­தமும், நீரி­ழிவு நோயும் அதிக உடலுழைப்பின்­மையும் கொலஸ்ட்ரோலை அதி­க­ரிக்க வைக்­கின்­றன.

    வயது அதி­க­ரிக்கும் போது கொலஸ்ட்ரோல் அதி­க­ரிப்பு ஏற்­படும். மது, புகைத்தல், மனச்­சுமை, சூழல் மாசு, சில மருந்­துகள் என பிற கார­ணங்­களால் உடலில் கொலஸ்ட்ரோல் அதி­க­ரிப்­பதற்கு முக்­கிய காரணம். தவ­றான உணவுப் பழக்கங்­களே என்­பதால் சிறு வய­தி­லி­ருந்தே உணவுக் கட்­டுப்­பாட்டைப் பேண வேண்டும்.

    அதி­க­ரித்த கொழுப்பு மற்றும் மாமிச உண­வு­களை குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வளரும் போது கொலஸ்ட்ரோலை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முடி­கின்­றது. தானிய வகைகள், மரக்­கறி வகைகள், இலைக் கறிவகைகள், பழ­வ­கைகள் முத­லா­ன­வற்றை அதி­க­மாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதி­க­ரித்த கொலஸ்ட்ரோல் இருப்­ப­தாக இனம் காணப்­பட்­ட­வர்கள் உணவுக் கட்­டுப்­பாட்டை தீவி­ர­மாக மேற்­கொள்ள வேண்டும்.

    மாமி­சங்கள், எண்ணெய் வகைகள், நெய் முத­லான பாற் பொருட்கள் என்­ப­வற்றை இயன்­றளவு தவிர்க்க வேண்டும். மது, புகைத்தல் என்­ப­வற்றை முற்­றாக தவிர்க்க வேண்டும். போதிய உட­லு­ழைப்பு அல்­லது தேகாப்­பி­யாசம் செய்ய வேண்டும். நடத்தல், நீந்­துதல், துவிச்­சக்­கர வண்­டியில் பய­ணித்தல் என்­பன கொலஸ்ட்ரோலைக் கட்­டுப்­ப­டுத்­திட உதவும்.

    நீரி­ழிவு மற்றும் உயர் குருதி அழுத்த நோயா­ளர்கள் தமது நோயைக் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க வேண்டும். வைத்­திய ஆலோ­ச­னை­யுடன் கொலஸ்ட்ரோலின் அதி­க­ரிப்பைக் கட்­டுப்­ப­டுத்தும் மருந்தை பாவிக்க வேண்டும்.

    கொலஸ்ட்ரோலின் அளவு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்த பின்னர் மருந்தை உட்­கொள்­ளாது விடினும் உணவு கட்­டுப்­பாட்டைத் தொடர வேண்டும். மார­டைப்பு மற்றும் ஸ்ரோக் ஆபத்து ஏது நிலை உள்­ள­வர்கள் தொடர்ந்தும் சிறிய அளவில் கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்தும் மருந்தை பாவிக்க வேண்டும். தேகப் பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    எமது சீரான வாழ்க்கை முறையினால் மிக ஆபத்தான நோய்கள் ஏற்படுவதை இலகுவாக தவிர்க்க முடியும். கொலஸ்ட்ரோல் கொழுப்பு அதிகரிப்பின் ஆபத்துக்கள் பற்றி சிறு வயதிலிருந்தே சுகாதாரக் கல்வி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நீண்ட காலம் நோயற்ற சுகவாழ்வை வாழ முடியும். முதுமையிலும் தொல்லைகளின்றி வாழ்ந்திட இது வழி வகுக்கும்.

    -டொக்டர் ச.முருகானந்தன்-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top