• Latest News

    November 28, 2013

    என்னுடைய நீண்ட பயணம் ஜனாதிபதி ஆசனத்துடன் முடிவடையும்: சஜித் பிரேமதாஸ

    தான் செல்வது நீண்டதொரு பயணம் எனவும், அந்தப் பயணம் ஜனாதிபதி ஆசனத்துடனேயே முடிவுறும் எனவும் ஹம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.

    திக்கும்புர சந்தியில் சென்ற 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பாடசாலை மாணவர்கள் உட்பட சிறுவர்களில் ஒரு தொகையினருக்கு சிறுவர் சேமிப்புப் புத்தகம் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அவர் உரையாற்றும்போது,

    'எனது பயணம் ஹுஸைன் போல்ட் 100 மீற்றர் ஓடுவது போன்றதல்ல. நான் மரதன் ஓட்டப் போட்டி போலும் பயணம் செல்கிறேன். அந்த மரதன் ஓட்டப் போட்டியில் பொதுமக்கள் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனும் இரு அரசியல் கட்சிகள் மட்டுமே உள்ளன. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சோடா போத்தல் உடைத்த்து போல் தோன்றுகின்ற கட்சிகள் நீடித்து நிற்பதில்லை. அந்தக் கட்சிகளின் பின்னே சென்று வீழ வேண்டாம். அன்று பருந்துக் கட்சி தோன்றியது. இன்று அந்தக் கட்சி இல்லை. இலங்கை சர்வதேசத்தின் பார்வையில் சிக்கும்போது இலங்கையில் பாரிய மாற்றம் நிகழும் என பெரும்பாலானோர் நினைத்தார்கள். நாட்டு மக்களுக்கு சகாயம் கிடைக்கும் என நினைத்தார்கள்.

    ஆயினும் இன்று பொதுமக்கள் ஏழ்மையின் அடித்தாளத்திற்கே சென்றுவிட்டார்கள். ஒரு நேர உணவுக்கும் கஷ்டப்படுகிறார்கள்.

    இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கைக்கு வந்து அரச மாளிகையில் இருந்துகொண்டு பிறந்த நாள் கேக் வெட்டினார். அதிலிருந்து சிறுதுளிதானும் பொதுமக்களுக்குக் கிடைத்ததா? நாட்டுமக்கள் வாய் திறந்து பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே இயலுமாக இருக்கின்றது.

    பெரும்பாலானோர் நாட்டுக்கு புதிய உதயத்தையும், புதுச் சக்தியொன்றையும் எதிர்பார்க்கிறார்கள். அதற்குரிய சக்தியை பெற்றுத்தர ஐக்கிய தேசியக் கட்சி ஆயத்தமாக இருக்கின்றது. அதற்கு பொதுமக்கள் சக்தி தேவையில்லை.

    நாட்டின் பொறுப்பும் திரைசேரியின் பலமும் சஜித் பிரேமதாசவுக்குக் கிடைக்குமாயின், அன்றிலிருந்து நாட்டு மக்களின் வயிற்றையும் வாயையும் நிரப்பும் செயற்பாடு ஆரம்பமாகும். வயிற்றையும் வாயையும் நிரப்புவதற்கு இன்று பச்சை யானை நாட்டுக்குத் தேவையாக உள்ளது. அதற்காக எல்லோரும் எங்களுடன் கைகோர்த்து இணைய வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: என்னுடைய நீண்ட பயணம் ஜனாதிபதி ஆசனத்துடன் முடிவடையும்: சஜித் பிரேமதாஸ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top