நிந்தவூரில் திருட்டு மற்றும் மக்களை அச்சமூட்டும் வகையில் நடந்து கொண்டவர்களாகக் கருதப் படுகின்றவர்களில் ஒருவரினால் தவறவிடப்பட்ட ஆடை மற்றும் பை ஆகியவற்றை பொது மக்கள் கண்டெடுத்துள்ளார்கள். இப்பொருட்கள் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன
நிந்தவூரில் இரவு பிடிபட்ட மர்ம நபரினால் இன்று நிந்தவூரில் ஹர்த்தால்
நிந்தவூரில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திருட்டு மற்றும் வீடுகளுக்கு கல் எறிதல் என பொது மக்களை அச்ச நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த குழுவினரை நேற்று (17.11.2013) இரவு 11 மணியளவில் பொது மக்கள் கடற் கரைப் பூங்காவிற்கு அருகில் தங்களது சீருடையை அணிவதற்கு ஏற்கனவே அணிந்து இருந்த டீசேர்ட்டை மாற்றுவதற்கு முற்பட்ட வேளையிலேயே மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, கலவரம் ஏற்பட்டன. குறிப்பிட்ட இடத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புத் தரப்பினர் வானை நோக்கி சுமார் ஒரு மணித்தியாலங்கள் துப்பாக்கி வேட்டுக்களை மேற் கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை மடக்கிப்பிடிக்கப்பட்ட மர்ம நபர் பாதுகாப்பு தரப்பினரால் கொண்டு செல்லப்பட்டார்கள்மேலும் நேற்று இரவு பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட இடத்தில் மர்ம நபர்களின் Bag மற்றும் பொருட்கள் இன்று காலையில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டது.


0 comments:
Post a Comment