நேற்றைய தினம் ஜனாதிபதியால்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின்
இயலாமை அம்பலமாகியுள்ளது என நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய
தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
2014ம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டமானது
மக்கள் மீது வரிச் சுமையை திணிக்கும் வகையில் அமைந்துள்ளது என அக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களினால் எதிர்பார்க்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் இதுவல்ல.சாதாரண மக்களின் உணவுப் பொருட்கள் மீதும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார்துறை ஊழியர்கள் தொடர்பில் கவனம்
செலுத்தப்படவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின்
இயலாமை அம்பலமாகியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின்
வீழ்ச்சி வெளியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment