• Latest News

    November 22, 2013

    எகிப்து அல் அஸ்ஹர் தலைமை இமாம் மற்றும் பல்கலைக்கழக தலைவர்களை அகற்றுமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிஸ் தாக்குதலில் இருவர் பலி

    அல் அஸ்ஹர் தலைமை இமாம் ஷெய்க் அஹமத் அல் தய்யிப் மற்றும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர் ஒசாமா அல் அப்த் ஆகியோரை அகற்றுமாறு மாணவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் இராணுவ ஆதரவு அரசின் குற்றச் செயல்களுக்கு மத ரீதியில் நியாயம் கற்பிப்பதாக அல்-அஸ்ஹர் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
    எகிப்து தலைநகர் கெய்ரோவின் நஸிர் நகரில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அல் அஸ்ஹரின் மைய நிர்வாக கட்டிடத்தை நோக்கி 1500 க்கும் அதிகமான மாணவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு
    பேரணியாக சென்றபோதே இவ்வாறு தெரிவித்தனர். இறுதியில் மாணவர்கள் மேற்படி கட்டிடத்திற்குள் ஊடுருவ முயன்றபோது பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

    இதன்போது, எகிப்து உள்துறை அமைச்சு மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் அப்துல் பத்தாஹ் அல் சிசிக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

    எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர் என்பகு குறிப்பிடத்தக்கது.

     எவ்வாறாயினும் எகிப்து பல்கலைக்கழங்களின் புதிய கல்வி தவணை ஆரம்பமான கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் மாணவர்கள் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முஹம்மத் முர்ஸிக்கு ஆதரவாகவும் இராணுவ ஆதரவு அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எகிப்து அல் அஸ்ஹர் தலைமை இமாம் மற்றும் பல்கலைக்கழக தலைவர்களை அகற்றுமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பொலிஸ் தாக்குதலில் இருவர் பலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top