• Latest News

    November 03, 2013

    இசைக்கு மொழியில்லை மதமில்லை இனமில்லை ஜாதியில்லை; எழுத்தாளர் உமா வரதராஜன்

    பி.எம்.எம்.ஏ காதர்;
    நாடு, இனம், மதம், ஜாதி என்ற குறுகிய வட்டங்களுக்குள் இசையை ஒரு போதும் அடைத்து விட முடியாது. இசைக்கு  மொழி இல்லை. அது மனதின் மொழி அதற்கு மொழி பெயர்ப்பாளர்கள் யாருமே தேவைப்படமாட்டார்கள். ஆகவே இசைக்கு மொழியில்லை மதமில்லை இனமில்லை ஜாதியில்லை. என சிறு கதை எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்தார்.
    மருதமுனை யூ.ஜே.நஸாரின் இசையமைப்பில் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை மொட்டுக்கள்' புதிய இஸ்லாமியப் பாடல்களின் இறுவட்டு வெளியீடும், மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு விழாவும் மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
    இதில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எழுத்தாளர் உமா வரதராஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    கவிஞர் அறநிலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்:- பிரதம அதிதியாக முன்னாள் கிழக்குமாகாண மேல்நீதிமன்ற நிதிபதியும், சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீல் கலந்துகொண்டாh.;
    அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் தலைவரும,; பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஐ.ஏ.ஹமீட், சட்டத்தரணி ஏ.எம.;றக்கீப், பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல்கையூம் ஆகியோருடன் எழுத்தாளர்கள,; கவிஞர்கள்,உள்ளீட்ட ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
    இவ்விழாவில்  கலைத் துறைக்குச் சேவையாற்றிய பத்துக் கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பாடல்களைப் பாடிய பாடகர்கள்; பத்துப் பேருக்கும் பாடல்களை இயற்றிய ஏழு பேருக்கும் அதிதிகளால் விருதுகள் வழங்கப்பட்ன.
    இங்கு உமா வரதராஜன் மேலும் உரiயாற்றுகையில்:- ஓர் ஆட்டிடையன் ஆடுகளை புல்மேய விட்டு விட்டு, புல்லாங்; குழலை, ஊதுகின்றான். ஆதில் இருந்த வெளிப்படும் ஓசையின் மொழி என்ன?
    ஒருமரண வீட்டின்; பறையொலியில் துயரத்தின் மொழியையும,; ஒரு கோயிலில் ஒலிக்கும்; நாதஸ்வரத்தில் பக்தியின் பரவசத்தையும் நாம் அறிகின்றோம் அவற்றின் மொழி என்ன?

    ஆகவே இசைக்கு மொழியுமில்லை, மதமுமில்லை, இனமுமில்லை, ஜாதியுமில்லை இசை என்பது எல்லைகளைக்; கடந்ததாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    நமது சூழலில் தமிழ் நாட்டில் இருந்து வரும் திரை இசைப்பாடல்களை கேட்குமாறு விதிக்கப் பட்டிருக்கின்றோம்; ஆனால் இன்றைய தலைமுறையைச்; சேர்ந்த பலருக்குத் உண்மை ஒண்றிருக்கின்றது.
    எழுபதுகளில் ஈழத்துத்; தமிழ் மெல்லிசைப் பாடல்கள் என்ற சுயமான வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்த எழுச்சி நிலையை இன்று நம்மால் காண முடியவில்லை.
    எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது அந்தக் காலத்தில் நம் நாட்டில் ஆங்காங்கே  பல இசைக் குழுக்கள் இருந்தன நாங்கள் ஆர்வத்துடன் கோயில் கோயிலாகத் திரிந்து ஆர்வத்துடன் பார்த்துக் கேட்டு ரசித்த ஜனரஞ்சகப் பாடல்கள் இன்றைக்கும் காதுகளில் ஒலித்தக் கொண்டிருக்ககின்றன.
    இப்படி நமது பிரதேசத்தில் உருவாகி. ஓலித்த பாடல் களுக்காகவே ரசிகர் கூட்டம்அன்று திரண்டணத என்பது வரலாறாகும்;. இதன் இன்னோரு மைல் கல்லாக பரமெஸ் - கோணேஸ் குழுவினர் இசையமைத்த பாடல்களைச் சொல்லலாம். 'இது இறக்குமதிச்; சரக்கல்;ல...எங்கள்  தோட்டத்தில் பூத்தவை' என்று அந்தப்;; பாடல்கள் எங்களைச் சுண்டியிழுத்த காலம் ஒன்றிருந்தது.
    நமது ஈழத்து  பாடல்கள் இன்னொரு வடிவம் எடுத்த காலம் ஒன்றிருந்தது. இதன் பின்னனியில் குலசீலநாதன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்றவர்களுக்கும், இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் முக்கிய பங்கிருந்தது.
    'கங்கையாளே' போன்ற பாடல்களுடன்  அந்த அத்தியாயம் ஆரம்பித்தது. சவாஹிர் ,முகம்மது சாலிஹ்,முத்துசாமி போன்ற பலரையும் இந்தத் தருணத்தில் எண்ணிப் பார்க்கவேண்டியிருக்கின்றது. காலப்; போக்கில் இந்தத் தனித்தவத்தை நாம் தவறவிட்டோம். அது திசைமாறி, தமிழ்நாட்டு சினிமா இசையை நகலெடுக்கம் ஒரு கலையாக இன்றைக்கு மாறி நிற்கின்றது.
    இன்று சொலெது, பொருள் எது, குரல் எது என்று புரியாத ஒரு திக்குத்தெரியாத இசைவனத்தில் முழித்துக்கொண்டிருகடகின்றோம்.  இப்படி ஒரு இரைச்சல் இசை கோலோச்சும் கால கட்டத்தில் நன்பர் யு.ஜே நசார் அவர்களின் 'மல்லிகை மொட்டுக்கள்'என்ற இந்த இசை அல்பம் வெளியாகின்றது..
    நண்பர் நஸார் அவர்களின் இந்த இசை அல்பத்திற்கு ஒரு வரலாற்றுப் புகழ் இருக்கின்றது. இஸ்லாமிய கீதங்களை உள்ளடக்கியதாகக் கிழகிகுமாகாணத்தில் வெளியாகின்ற, காட்சிகளும், கானங்களும் அடங்கிய முதலாவது அல்பம் இதுவென்றே எண்ணுகின்றேன்.
    ஆந்த வகையில் இந்தப் பாடல்களும, இவற்றை இசையமைத்த நாஸர் அவர்களுக்கும் ஒரு முக்கியத்துவம்; உண்டு. எல்லா மதங்களுமே நன்நெறிகளைத்தான் சாராம்சமாகக் கொண்டிருக்கின்றன.
    சுகஜீவன்கள் மீது காட்டப்; படவேண்டிய அன்பைத்தான் போதிக்கின்றன. இஸ்லாமிய கீதங்கள் என நண்பர் நஸார் அவர்கள் வரையறை செய்து குறிப்பிட்டாலுங் கூட. அவருடைய பாடல்கள் எல்லேருக்குமான நன்நெறிகளைப் போதிப்பவை என்பதில் சந்தேகமில்லை.
    இந்தப் பாடல்களிலே நோன்பின் மகத்தவம், பெருநாள் கொண்டாட்டம் போன்ற நம் கலாசாரப் பாரம்பரியங்கள் இழையோடுகின்றன. இங்கேயுள்ள பெரும் பாலான கலை இலக்கிய வாதிகள் சந்திக்கும் பிரச்சினை தங்கள் படைப்புக்கனைத் தாங்களே வியாபாரமும,வினியோகமும் செய்ய வேண்டியிருப்பதாகும்.
    ஆப்படியானவர்களுக்கு நேசக்கரங்களை நீட்டி அதரவு அளிக்க வேண்டியது வாசகர்களினதும், ரசிகர்களினதும் கடமையாகும். முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்று கூறுவார்கள். ஆனால் நஸாரின் இந்த மல்லிகை நறுமணம் வீசுகினறது.
    இதை ஒரு ஆரம்பப் புள்ளியா, அடிப்படையாகக் கொண்டு நாஸர் அவர்கள் மேலும் பல தனித்தவமான இசைக் கோலங்களை ரசிகர்களுக்க வழங்க வேண்டும் என உமா வரதராஜன் மேலும் தெரிவித்தார்.    


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இசைக்கு மொழியில்லை மதமில்லை இனமில்லை ஜாதியில்லை; எழுத்தாளர் உமா வரதராஜன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top