கே.சரவணன்;
மன்னார், ஜோசப்வாஸ் நகர் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவருடைய தாலிக்கொடியினை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கும் நபரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது
குறித்த பெண் மன்னாரில் ஜோசப்வாஸ் நகர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியினை அவ்விடத்தில் நின்ற நபரொருவர் பறித்துச் சென்றுள்ளார்.மன்னார், ஜோசப்வாஸ் நகர் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவருடைய தாலிக்கொடியினை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கும் நபரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது
இந்த நிலையில் குறித்த பெண் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று மாலை மன்னார், புதுக்குடியிருப்பு கோணர் பண்ணைக் கிராமத்தில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததோடு அபகரிக்கப்பட்ட தாலிக்கொடியினையும் மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபரை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அந்நபரை அடையாள அணிவகுப்பிற்கு உற்படுத்துமாறும் மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment