இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவருக்கு 10 குழந்தைகள் இறந்தே பிறந்த பரிதாபம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள கோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28).
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ரேவா மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முன்னதாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு இறந்தே 9 குழந்தைகள் பிறந்தன. மருத்துவமனையை அடைந்ததும் அஞ்சுவின் கணவர் சஞ்சய் 9 குழந்தைகளின் சடலங்களை மருத்துவர்களிடம் காட்டியபோது அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள கோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28).
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ரேவா மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அஞ்சுவை பரிசோதனை செய்தபோது அவரது கர்பப்பையில் மேலும் ஒரு குழந்தை இருந்தது தெரிய வந்தது. நேற்று அதிகாலை அந்த 10வது குழந்தையை பெற்றெடுத்தார் அஞ்சு. ஆனால் அதுவும் இறந்தே பிறந்தது.
இளம்பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றும் தற்போது ஒன்று கூட உயிரோடு இல்லாதது செய்தியை கேள்விப்பட்ட மக்களை கவலை அடைய செய்துள்ளது.

0 comments:
Post a Comment