உலகில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியான ஏ.கே. 47 (AK 47) துப்பாக்கியை கண்டுபிடித்த மிகைல் கலஸ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் இன்று ரஷ்யாவில் காலமானார்.
சோவியத் யூனியன் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட மிகைல் கலஸ்னிகோவ் இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஏ.கே. 47 துப்பாக்கியை வடிவமைக்கத் தொடங்கினார். பல சோதனைகள், பரீட்சார்த்த பாவனையின் பின்னர் 1949 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் இராணுவத்தினால் ஏ.கே. 47 துப்பாக்கி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இத்துப்பாக்கி கண்டுபிடிப்புக்காக பல்வேறு விருதுகளை மிகைல் கலஸ்னிகோவ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment