ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு பிரதேச சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் இன்றும் தோல்வியடைந்தன.
கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம மற்றும் அம்பாறை மாவட்டத்தின் தமண ஆகிய பிரதேச சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்தன.
ஹோமாகம பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்தது. ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

தமண பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்தது. திட்டத்திற்கு ஆதரவான பிரதேச சபை தலைவர் மட்டுமே வாக்களித்தார்.
இந்த பிரதேச சபையில் ஆளும் கட்சியின் சார்பில் 7 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் அங்கம் வகிக்கின்றனர்.
ஆளும் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட 18 பிரதேச சபைகளில் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் ஏற்கனவே தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment