சிரியாவில் ராணுவத்தினர் மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உள்பட 76 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. கடந்த 2011ல் இருந்து போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆனால், சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெனிவா சமாதான கூட்டம், ரசாயன ஆயுதங்களை அழிப்பது உள்ளிட்ட உடன்பாடுகளால் சிரியாவில் போர் அபாயம் நீங்கியது. தற்போது வரை சிரியாவில் நடைபெறும் நிகழ்வுகளை ஐநா, மனித உரிமை அமைப்பு மற்றும் உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் சிரியாவின் 2வது பெரிய நகரான அல்போவில் ஹெலிகாப்டரில் இருந்து வெடிமருந்து நிரப்பப்பட்ட சிலிண்டர், ஆயில் பேரல்களை வீசி சிரிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 28 குழந்தைகள் உள்பட 76 பேர் பலியாகி உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இதனால் சிரியாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment