மேல் மாகாண மற்றும் தென் மாகாண சபைகள் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் கலைக்கப்படும் என அமைச்சர் சுசில்ஜயந்தபிரேம இன்று நாடாளுமன்றத்தில்தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கலைக்கப்படும் இரண்டு மாகாண சபைகளிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப் பெறும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
உட்கட்சி அதிகார போட்டியில் இருந்து விடுப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இந்த தேர்தலில் அவர்களினால் முடிந்தால் வெற்றிப்பெற்று காட்டட்டும்.கலைக்கப்படும் இரண்டு மாகாண சபைகளிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப் பெறும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் அதன் கூட்டணிக்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருப்பதுடன் சகல பிரதேசங்களிலும் வாக்கு வங்கியை பலப்படுத்த முடிந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவச் சபை என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் எந்த கட்சியிலும் தலைமைத்துவச் சபை என்ற ஒன்று கிடையாது.
எத்தனை தலைமைத்துவச் சபையை ஏற்படுத்தினாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றிபெறும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சகல இன மக்களும் உள்ளனர். மலையகத்தில் குறிப்பாக நுவரெலியாவில் 98 ஆயிரம் மேலதிக வாக்குகளினால் முன்னணி வெற்றியீட்டியது என்றார்.

0 comments:
Post a Comment