• Latest News

    December 23, 2013

    கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வினை ஒத்தி வைத்ததானது சாதுரியமானதாகும்: ஹரிஸ் எம்.பி புகழாரம்

    எஸ்.ஆர்;
    தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று காலை வரை வாக்களிப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற முடிவிலிருந்தனர். பின்னர் இந்த முடிவிலிருந்து மாறுபட்டு எதிர்த்து வாக்களிக்கப்போகிறோம் என்ற அவர்களின் தீர்மானத்தை அறிந்து கொண்டு மாதாந்த கூட்டத்தொடரினை ஒத்தி வைத்த செயலானது ஒரு புத்திசாலித்தனமான விடயமாகும். இதனால் கட்சியினதும் சமூகத்தினதும் நற்பெயர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

    கல்முனை மாநகர சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகள் என்ன என அறிந்துஇ அந்த முரண்பாடுகளை கலைவற்கு சகல முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினரும்இ கல்முனைதொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
    தெரிவித்தார்.
    அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
    கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  உறுப்பினர்களில் சிலர் கருத்து முரண்பாடுகளுடன் செயற்பட்டமை கவலை அளிக்கின்றதாகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆளும் கட்சியாகவும்இ அதிக முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டதாக காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என நினைத்து செயற்பட்டதானது வியக்கத்தக்க விடயமல்ல.

    கடந்த முதல்வர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு ஊடாக தமிழ் மக்களுக்குரிய அபிவிருத்திகளையும்இ அவர்களது பகுதிகளுக்குரிய அதிகாரத்தினையும் வழங்கியுள்ளார்கள். இதற்கு பகரமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதல்வர்களுக்கு முழு ஆதரவினையும் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று காலை வரை வாக்களிப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற முடிவிலிருந்தனர். பின்னர் இந்த முடிவிலிருந்து மாறுபட்டு எதிர்த்து வாக்களிக்கப்போகிறோம் என்ற அவர்களின் தீர்மானத்தை அறிந்து கொண்டு மாதாந்த கூட்டத்தொடரினை ஒத்தி வைத்த செயலானது ஒரு புத்திசாலித்தனமான விடயமாகும். இதனால் கட்சியினதும் சமூகத்தினதும் நற்பெயர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

    கல்முனை மாநகர சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகள் என்ன என அறிந்துஇ இந்த முரண்பாடுகளை கலைவற்கு சகல முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன். மேலும் இதற்காக தலைவர் ஊடாக  இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றேன்.

    குறிப்பாக கல்முனை மாநகர சபை வரவு-செலவுத்திட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இப்பொழுது கல்முனையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் வேறு கட்சிகளின் தயவைக் கொண்டு ஆட்சியையும்இ வரவு-செலவு திட்டத்தையும் கொண்டு செல்லவது முஸ்லிம் காங்கிரஸினுடைய பலகீனம் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும்இ சமூகத்தினதும் பலகீனமாகவும் தலைகுனிவாகவும் பார்க்கப்படும் என்பது எனது கருத்தாகும்.

    ஏனென்றால் கல்முனை மாநகரத்தை முஸ்லிம்களுடைய முகவெத்திலையாக நாங்கள் எல்லோரும் அடையாளப்படுத்திவரும் சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்திற்காக இது சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் வேறுபாடுகளை மறந்து விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும் என வேண்டுகேள்விடுக்கின்றேன்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வினை ஒத்தி வைத்ததானது சாதுரியமானதாகும்: ஹரிஸ் எம்.பி புகழாரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top