அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிவறையில்
வீடியோ கமரா பொருத்தப்பட்டிருந்தமை ஊழியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பெண் ஊழியர்கள் பாவிக்கும்
கழிவறையொன்றில் சிறிய வீடியோ கமரா பொருத்தப்பட்டிருந்தமை கண்டு
பிடிக்கப்பட்டமை குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் விஜேதாச அத்தபத்து
தெரிவித்துள்ளார்.
இது யாருடைய வேலை எனத் தெரியவில்லை எனினும், சுகாதார அமைச்சு
மட்டத்திலும் விசாரணைகள் முன் எடுக்கப்பட்டு வருவதாக மேலும் அவர்
தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment