• Latest News

    January 27, 2014

    குழந்தை பெற்ற கன்னியாஸ்திரியின் படம் வெளியாகியது!!

    இத்தாலியில் கடந்தவாரம் குழந்தையொன்றை பிரசவித்து பரபரப்பை ஏற்படுத்திய எல் சல்வடோரைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அடையாளம் காணப்பட்டுள்ளார். இத்தாலிய பத்திரிகையொன்று அவரின் புகைப்படமொன்றையும் முதல் தடவையாக வெளியிட்டுள்ளது.

    இத்தாலியின் ரெய்ட்டி நகரில் கடந்த புதன்கிழமை இவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தமை பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இத்தகவல் உலகம் முழுவதும் ஊடகங்களில் வெளியானது.
    இது தொடர்பாக ஆராய்ந்த இத்தாலியின் 'கொரைய்ரே டெலா சேரா' எனும் பத்திரிகை மேற்படி பெண் 33 வயதான கன்னியாஸ்திரி ரொக்ஷானா ரொட்ரிகஸ் எனத் தெரிவித்துள்ளது. அவரின் புகைப்படத்தையும் அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

    இப்பெண் தனது குழந்தைக்கு பிரான்சிஸ் என பெயரிட்டுள்ளார். இத்தாலியில் மிக பிரபலமான பெயர்களில் ஒன்று இதுவாகும். அதேவேளை தற்போதைய பாப்பரசரான முதலாம் பிரான்ஸிஸ் மீதான மதிப்பை வெளிப்படுத்தும் வகையில் தனது மகனுக்கு பிரான்ஸிஸ் என தான் பெயரிட்டதாக ரொக்ஷானா தெரிவித்துள்ளார்.

    தான் தாயானமை குறித்து மிக மகிழ்ச்சியடைவதாக சமூக சேவகர் ஒருவரிடம் ரொக்ஷானா தெரிவித்துள்ளார். தற்போது ரெய்ட்டி நகர வைத்தியசாலையொன்றில் தங்கியுள்ள அவர் தனது மகனை வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை என ரொக்ஷான முன்னர் கூறியபோதிலும் அவர் தனது பழைய காதலர் மூலம் கர்ப்பமாகியிருக்கலாம் என்ற குட்டு வெளிப்பட்டுள்ளது.

    இவர் கடந்த செப்டெம்பர் மாதமே கன்னியாஸ்திரியாக இணைந்தாராம். எல் சல்வடோர் நாட்டைச் சேர்ந்த ரொக்ஷானா கடந்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் தனது கடவுச்சீட்டை புதுப்பிப்தபதற்காக எல் சல்வடோரிலிருந்து  இத்தாலிக்கு திரும்பி வந்தார் என ரெய்ட்டி நகரிலுள்ள பிதா பெனிடெடோ பால்செட்டி தெரிவித்துள்ளார்

    இவர் சார்ந்த கன்னியாஸ்திரிகள் அமைப்பு ரெய்ட்டி நகரில் முதியோர் இல்லமொன்றை பராமரித்து வந்தது. இவர் கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் மயங்கிவிழுந்தபோது, சக கன்னியாஸ்திரிகளால் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ரொக்ஷானா கர்ப்பமடைந்தமை குறித்து அவர் சார்ந்த துறவிகள் அமைப்பைச் சேர்ந்த மற்ற கன்னியாஸ்திரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

    தம்மை இனங்காட்ட விரும்பாத கன்னியாஸ்திரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 'நாம் நிச்சயமாக அவரை பார்ப்பதற்கு செல்லமாட்டோம். அவர் செய்தது சரியானதல்ல. அவர் தனது உறுதிமொழியை மீறியுள்ளார். அவர் (கன்னியாஸ்திரிகள் இல்லத்துக்கு) இங்கு மீண்டும் திரும்பி வரமாட்டார்' என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குழந்தை பெற்ற கன்னியாஸ்திரியின் படம் வெளியாகியது!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top